ஜெயிக்கப்போவது யார்?: ராஜாவா? ரஹ்மானா?

Published On:

| By Kavi

இந்திய சினிமாவில் கொரோனா பொது முடக்கத்துக்கு பின் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் வணிகரீதியாக திரைப்பட துறைக்கு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் கடந்த மூன்று மாதங்களில் வெளியான வாரிசு, துணிவு, வாத்தி, பகாசூரன்,  கண்ணை நம்பாதே, அவதார் – 2 ஆகிய படங்கள்  தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.

வழக்கம்போல் புதுமுகங்கள் நடிப்பில், மற்றும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட்ட சுவடே இல்லாமல் தியேட்டரை விட்டு வெளியேறியுள்ளது.

இது அபாயகரமான போக்கு என்றாலும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் வசூல் கணக்கு கோஷங்களில், ஆரவாரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவுவதற்கான காரணங்கள் என்ன என்பதை, விவாதிக்க கூட விரும்பாமல் கடந்துபோகின்றனர் தயாரிப்பாளர்களும், வெற்றி மிதப்பில் இருக்கும் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும்.

இந்த நிலையில், மார்ச் இறுதி நாள் என்றாலும் ஏப்ரல் நிதியாண்டின் தொடக்கத்தில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் பல தடைகளை கடந்து தயாரான சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் நடிப்பில் கிருஷ்ணா இயக்கியுள்ள “பத்துதல”,

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள படம்” விடுதலை” என இரண்டு படங்களும் மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் ரீலீஸ் செய்யப்பட உள்ளது.

சிலம்பரசன், கவுதம் கார்த்திக் Vs விஜய்சேதுபதி, சூரி என்பதை காட்டிலும் நீண்ட நாட்களுக்கு பின் இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பத்துதல படத்துடன் நேருக்கு நேர் ஒருநாள் தாமதமாக களத்தில் மோதுகிறது.

இரண்டு படங்களின் பாடல்களும் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

கதாநாயகர்களின் ரசிகர்களை காட்டிலும் இசையமைப்பாளர்களின் ரசிகர்கள் படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர் என்பது தமிழ் சினிமாவுக்கு புதிது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திரைக்கதையும், ரஹ்மான், ராஜாவின் இசையும் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இராமானுஜம்

ராகுலுக்கு எதிராக திரும்பும் கூட்டணிக் கட்சி தலைவர்கள்!

கருப்பு கூலிங் க்ளாஸ்…தொப்பி…எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel