குரூப் 1 விண்ணப்ப படிவங்கள் திருத்தம் செய்ய 27.08.2022 -ம் தேதி முதல் 29.08.2022 இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணை எஸ்.பி., 25 வணிகவரி உதவி ஆணையாளா், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், 7 ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி என 92 இடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கு
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த மாதம் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் நாளையுடன் (22.08.2022) சேவை நிறுத்தப்படும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 27-ஆம் முதல் 29-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை tnpsc group 1 விண்ணப்பங்களில் திருத்தம் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த இடங்களை நிரப்ப முதல்நிலைத் தேர்வானது 30.10.2022 ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை தேர்வு நடைபெறும்.
- க.சீனிவாசன்
வேலைவாய்ப்பு : ரூ.1,38,500 ஊதியத்தில் பணி… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!