சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு தோனியை புகழ்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.
ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி நேற்று (ஏப்ரல் 21) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்திருந்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்தார். அந்த புகைப்படங்கள் ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்ட ட்வீட் ஒரு புறம் வைரலாகி வருகிறது.
அவரது ட்விட்டர் பதிவில், “ஆறு தான் கடல்ல வந்து சேருது. கடல் என்னைக்கும் ஆற தேடி போறது இல்லை. வெற்றின்ற ஆறு சென்னைன்ற 7 கடல்ல வந்து சேர்ந்திருச்சு.
பிரியாணிக்கு ஹைதராபாத் உலக பேமஸ். ஆனா எல்லாரோடா ஆல் டைம் பேவரைட் என்னவோ சென்னை இட்லி, சாம்பார் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அணியின் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
இந்தியாவில் உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!
ரமலான் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!