கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சட்னி

தமிழகம்

கோடை வெப்பத்தைத் தணிக்க ஜூஸ், கீர், நீராகாரம், களி, கஞ்சி, கூழ், மில்க்‌ஷேக், பானகம், பச்சடி எனப் பலவகை உணவுகளைத் தயாரித்து உண்போம். அதைவிட முக்கியமானது, சத்தான இந்த நெல்லிக்காய் சட்னி. அனைவருக்கும் ஏற்ற இந்தச் சட்னி, காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். கோடையைக் குளுமையாக்கும்.

என்ன தேவை?

முழு நெல்லிக்காய் – 6 (கொட்டை நீக்கி, துண்டுகளாக்கவும்)
முழு உளுத்தம்பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு (அலசி ஆய்ந்தது)
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். அதனுடன் நெல்லிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் அதனுடன் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்துச் சட்னியுடன் கலக்கவும்.

குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்தும் அரைக்கலாம்.

பனங்கிழங்கு பிரட்டல்

நேரம் தவறி சாப்பிடுபவர்களா நீங்கள்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *