கோடையில் வியர்வைக் கசகசப்பு, நாவறட்சி, உடல் உஷ்ணம் என மக்களைத் தவிக்கவைக்கும் இயற்கையே, இந்தச் சூட்டைத் தணிக்கும் வகையில் வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நுங்கு, எலுமிச்சை, நன்னாரி, சோற்றுக் கற்றாழை, வாழைத்தண்டு உட்பட ஏராளமான வரப்பிரசாதங்களையும் அளித்துள்ளது.
அவற்றில் ஒன்றுதான் பனங்கிழங்கு. இந்தப் பனங்கிழங்கு பிரட்டல், நீரிழிவு உள்ளவர்களுக்கும் உடல் மெலிந்தவர்களுக்கும் ஏற்றது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அனைவரும் ருசிக்கலாம்.
என்ன தேவை?
முழுப் பனங்கிழங்கு – 2
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 3 பல் (தட்டவும்)
எண்ணெய், உப்பு – சிறிதளவு
எப்படிச் செய்வது?
குக்கரில் பனங்கிழங்குடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும் தோல் நீக்கி உடைத்து நார் எடுக்கவும். பிறகு கிழங்கைப் பிளந்தால் உள்ளே கிழங்கில் தும்பு (குச்சி) இருக்கும். அதை தனியே எடுத்துவிடவும்.
பிறகு, கிழங்கைச் சிறிய துண்டுகளாக்கவும் (குச்சியின் நுனியில் இருக்கும் மிருதுவான பகுதியைச் சாப்பிடலாம்). வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் கிழங்குத் துண்டுகள், மிளகுத்தூள், பூண்டு, உப்பு சேர்த்துக் கிளறி எடுக்கவும். தோல் உரித்து முழு கிழங்காகவும் சாப்பிடலாம்.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சீமான் பாராட்டும் “இராவண கோட்டம்”