pro kabaddi league Ahmedabad

புரோ கபடி லீக் இன்று தொடக்கம்…கோப்பையை தட்டி தூக்குமா தமிழ் தலைவாஸ்?

விளையாட்டு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் புரோ கபடி லீக் சீசன் 10 இன்று (டிசம்பர் 2) தொடங்குகிறது. இன்று (டிசம்பர் 2) தொடங்கும் இந்த கபடி லீக் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 12 நகரங்களில் 12 வாரங்கள் கபடி போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இதன் மொத்த பரிசுத்தொகை 8 கோடி ரூபாய் ஆகும். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 3 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூபாய் 1.8 கோடியும் கிடைக்கும். இதன் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன், தெலுங்கு டைட்டன்ஸ் அணி மோதுகிறது.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா மைதானத்தில் தொடங்குகிறது.தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2-வது ஆட்டத்தில் யு மும்பா- யுபி மோதாஸ் அணிகள் மோதுகின்றன.

நாளை (டிசம்பர் 3) இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி தன்னுடைய சொந்த மண்ணான சென்னையில் டிசம்பர் 22-ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரவு 7 மணிக்கு இந்த போட்டி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். கடந்த 9 சீசன்களிலும் தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை வெல்லவில்லை. இந்த சீசனிலாவது சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை தட்டி தூக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

புயல் முன்னெச்சரிக்கை: திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ரூ.5 போதும்: சென்னை மெட்ரோவின் ‘புயல் ஆஃபர்’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *