புயல் முன்னெச்சரிக்கை: திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மிக்ஜம் புயல் காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிசம்பர் 3) ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டிசம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ரூ.5 போதும்: சென்னை மெட்ரோவின் ‘புயல் ஆஃபர்’!
மணல் குவாரி, ஹவாலா, பி.எம். ஆபீஸ்… -கைதான ED அதிகாரி பற்றி FIR இல் புதிய தகவல்கள்!