பிரபல நடிகையின் நெருக்கத்தால் சானியா மிர்சா-சோயப் மாலிக் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் கடந்த அக்டோபர் 30, 2018 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டுள்ளனர்.
இருவருக்குள்ளும் ஏற்பட்ட மோதல்!
இதனை தொடர்ந்து சானியா துபாயில் தனது மகனுடனும், சோயிப் பாகிஸ்தானிலும் தனித்தனியாகவும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன
இதற்கு காரணம் என்ன என்று தெரியாத நிலையில், சானியா மிர்சா தனது காதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்கள் குறித்து சமூகவலைதளங்களில் மறைமுகமாக கருத்து தெரிவித்து வந்தார்.
கடந்த மாதம் சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ”உடைந்த இதயங்கள் எங்கே செல்லும்… அல்லாவை தேடியே” என்று பதிவிட்டு இருந்தார்.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தங்களது மகனின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்தே துபாயில் கொண்டாடி இருந்தனர். அதுகுறித்த புகைப்படங்களை சோயிப் மாலிக் அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டதும் வைரலாயின. ஆனால், சானியா மிர்சா தன்னுடைய சமூக வலைதளங்களில் அதனை பகிரவில்லை.
நண்பர் அளித்த பகீர் பேட்டி!
இந்த பதிவுகளின் மூலம் அப்போது இருந்தே சானியா மிர்சா – மாலிக் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக ஊடகங்கள் சந்தேகங்கள் எழுப்பின.
இந்நிலையில் இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சோயப் மாலிக்கின் நெருங்கிய நண்பர், “அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் கருத்து கூற முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்” என்று தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் நண்பரின் பெயரை இதுவரை செய்தி ஊடகங்கள் வெளியிடவில்லை.
பிரிவுக்கு காரணம் யார்?
இதற்கிடையே சானியா மிர்சா – மாலிக் தம்பதியினரின் பிரிவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகையும், யூடியுபருமான ஆயீஷா ஓமர் முக்கிய காரணம் என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் ஆயிஷாவுடன் மாலிக் நெருக்கமாக போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து சானியா என்ன கூறினார் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. அதற்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து சோயிப் மாலிக் நழுவினார்.
அதே வேளையில், போட்டோசூட்டின் போது தனக்கு நிறைய உதவிகள் செய்தார் என்று மாடல் ஆயிஷா ஓமர் பேட்டியளித்துள்ளார்.
முடிவுக்கு வந்த 12 வருட திருமண வாழ்க்கை!
ஆயிஷாவுக்காக தன்னை ஏமாற்றிய மாலிக்கை விட்டு தற்போது சானியா பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த விஷயம் குறித்து இருவரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இத்துடன் இரு நாட்டு நட்சத்திரங்களான சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக்கின் 12 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் சமூகவலைதளங்களில் சானியா மிர்சாவுக்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநருக்கு சுயமரியாதை இருந்தால்? – கொளத்தூர் மணி காட்டம்!
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சவுக்கு சங்கர் விடுதலையில் சிக்கல் : என்ன காரணம்?