மெரினா கடற்கரையில் வாலிபால் போட்டி: அனுமதி இலவசம்!

விளையாட்டு

முதலமைச்சர் கோப்பைக்கான பீச் வாலிபால் போட்டிகள் இன்று (ஜூலை 8) முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர்‌ கோப்பை – 2023 மாநில அளவிலான போட்டிகள்‌ சென்னையில்‌ 17 இடங்களில்‌ ஜுலை 1-ஆம் தேதி முதல்‌ தொடங்கி நடைபெற்று வருகிறது.

marina beach volleyball competition 2023

மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 38 மாவட்டங்களை சேர்ந்த 27,000-க்கும்‌ மேற்பட்ட வீரர்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ பங்கேற்று விளையாடி வருகின்றனர்‌. இந்தப்‌ போட்டிகள்‌ ஜூலை மாதம்‌ 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை மெரினா கடற்கரையில்‌ இன்று முதல்‌ ஜூலை 11 வரை தினமும்‌ மாலை 4 மணிக்கு பீச்‌ வாலிபால்‌ போட்டிகள்‌ நடைபெறுகிறது. இந்தப்‌ போட்டிகளில்‌ மண்டல அளவில்‌ வெற்றி பெற்ற பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ – மாணவியர்‌ அணிகள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

marina beach volleyball competition 2023

பள்ளி மாணவ – மாணவியர்‌ பிரிவில்‌ தலா 18 அணிகளும்‌ கல்லூரி மாணவ – மாணவியர்‌ பிரிவில்‌ தலா 18 அணிகளும்‌ விளையாடுகின்றன. இந்த போட்டியை காண அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செல்வம்

விம்பிள்டன்: 4 வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *