ஆசிய கோப்பை- ஜடேஜா விலகல்: துபாய் செல்லும் ஆல்ரவுண்டர்!

விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஜடேஜா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 27ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுவரை சிறப்பாக விளையாடி உள்ள நிலையில் 8ஆவது முறையாக மீண்டும் ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம்!

ஆனால் அதற்கு விழுந்த இடியாக தற்போது, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஜடேஜா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 29 பந்துகளில் 35 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதே போல் பாகிஸ்தானுக்கு எதிராக 2 ஓவர்களை வீசி 11 ரன்களையும், ஹாங்காங் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

ஜடேஜாவுக்கு மாற்று வீரர் யார்?

இந்நிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.

அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

aksar patel joined indian cricket

இதற்கிடையே ஆசியக்கோப்பையில் விலகியுள்ள ஜடேஜாவுக்கு பதிலாக, மற்றொரு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேக் அப் வீரராக இந்தியாவில் தயாராக இருந்த அவர் உடனடியாக துபாய்க்கு விரைந்துள்ளார்.

இந்திய வீரர்களின் பட்டியல்!

ஆசிய கோப்பைக்கான திருத்தி அறிவிக்கப்பட்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்),

ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

சூர்யகுமாருக்கு தலை வணங்கிய விராட் கோலி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *