மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு!

அரசியல் இந்தியா

மேற்குவங்க மாநிலத்தில் இன்று (ஜூலை 8) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடி மையத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 63,229 கிராம பஞ்சாயத்துக்கள், 9730 பஞ்சாயத்து சமிதி, 928 ஜில்லா பரிஷத் ஆகிய இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல், பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 65 ஆயிரம் துணை ராணுவ படையினர் மற்றும் 70 ஆயிரம் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஜூலை 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது திரிணாமுல், காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரமானது தேர்தல் நாளான இன்றும் தொடர்ந்துள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வரும் நிலையில் கூச்பெர் மாவட்டத்தில் உள்ள பரவிதா ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடி மையத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதிகள் பதட்டமான சூழல் நிலவுகிறது. காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: தினை கிச்சடி

TNPL: சச்சின் அதிரடி… இறுதிபோட்டிக்கு சென்ற கோவை அணி!

காடப்புறா கலைக்குழு: விமர்சனம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *