ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகியவை ‘கிராண்ட்ஸ்லாம்‘ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள்.
இந்த போட்டிகள் அனைத்தும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும். இந்த நான்கு வகையான போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தொடங்கியது.
இந்த தொடர் ஜூலை 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு (ஜூலை 7) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர்பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் சுவிஸ் வீரர் வாவ்ரின்காவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம்முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் முதல் இரண்டு செட்களையும் கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3- வது செட் ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக விளையாடினர்.
ஆனால், மூன்றாவது செட்டை 7-6 என்ற கணக்கில் சுவிஸ் வீரர் வாவ்ரின்காவை வீழ்த்தினார் ஜோகோவிச். இதன் மூலம் அவர் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: தினை கிச்சடி
காடப்புறா கலைக்குழு: விமர்சனம்