xகார்த்தி படத்தில் இணைந்த வெப் சீரிஸ் ஸ்டார்!

public

கள்ளச் சிரிப்பு இணையத் தொடர் மூலம் கவனம் பெற்றுவரும் அம்ருதா ஸ்ரீனிவாசன் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தில் இணையவுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கள்ளச் சிரிப்பு’ என்ற இணையத் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் மையக் கதாபாத்திரத்தில் அம்ருதா ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார். தற்போது இவர் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் ‘தேவ்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற்றது. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு உக்ரைனில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் படக்குழுவுடன் அம்ருதா ஸ்ரீனிவாசன் இணையவுள்ளார்.

ஐம்பது சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் உக்ரைனைத் தொடர்ந்து அமெரிக்கா, மும்பை, இமயமலை ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. டிசம்பர் 21ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *