Uசீட் பெல்ட் அணியாத இந்தியர்கள்!

public

இந்தியாவில் 75 சதவிகித மக்கள் கார் போன்ற வாகனங்களை ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், இந்தியாவில் சீட் பெல்ட் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை 17 நகரங்களில் நடத்தியது. இதில் 2500க்கும் அதிகமான ஓட்டுநர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவில் 75 சதவிகித மக்கள் கார் போன்ற வாகனங்கள் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது நான்கில் மூன்று பங்கு மக்கள் சீட் பெல்ட் அணிவதில்லை. இதில் 68 சதவிகித ஆண்களும், 81 சதவிகித பெண்களும் சீட் பெல்ட் அணிவதில்லை.

எஸ்யூவி வாகனங்களை ஓட்டுபவர்கள் அதிகளவில் சீட் பெல்ட்டுகளை அணிவதில்லை. அதாவது எஸ்யூவி வாகன ஓட்டுநர்களில் 8ல் ஒருவர் சீட் பெல்ட் அணிவதில்லை. மேலும், ஹேட்ச்பேக் வாகன ஓட்டுநர்களில் 72 சதவிகிதம் பேரும், செடான் கார் ஓட்டுநர்களில் 68 சதவிகிதம் பேரும், ஆடம்பர கார் ஓட்டுநர்களில் 64 சதவிகிதம் பேரும் சீட் பெல்ட் அணிவதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் வாகன விபத்துகளில் இறந்தவர்களில் 15 பேர் சீட் பெல்ட் அணியாததால் உயிரிழக்க நேர்ந்திருக்கிறது.

சீட் பெல்ட் அணிபவர்கள் போக்குவரத்துக் காவல்துறையின் எச்சரிக்கை மற்றும் அபராதத்திற்குப் பிறகே சீட்பெல்ட் அணியத் தொடங்கியதாகவும், அரசு இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருந்தால் மட்டுமே அனைவரும் சீட் பெல்ட் அணிவது சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, சீட் பெல்ட் அணிவது விபத்துக்களால் உயிரிழக்கும் வாய்ப்பை 45 சதவீதம் குறைக்கிறது. மேலும், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டும் போது நேரும் விபத்துக்களில் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் 50 சதவீதம் குறைவு என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *