uஇது வேற லெவல் ‘ஷ்ரூவ்வ்வ்…’: அப்டேட் குமாரு

public

எவ்வளவோ படங்கள் நடிச்சிருக்காரு. அப்போவெல்லாம் இந்த சோஷியல் மீடியாவுல இவ்வளவு பிரபலம் ஆகலை இந்த கரண். ஆனா இந்த ஒரு மாசத்துல உலக லெவல் ஃபேமஸ் ஆயிருக்காரு. விஜய் நடிச்ச கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்துல கரணுக்கு கொடுத்திருந்த ‘ஷ்ரூவ்வ்வ்…’ங்கிற அந்த பீஜிஎம்தான் இப்போ கரணோட புது அடையாளமா மாறிருக்கு.

நின்னா கரண் உட்கார்ந்தா கரண் நடந்தா கரண்னு இந்த கரண் அண்ணா ஆர்மி ஃபுல் ஃபோர்ஸா இயங்கி மீம்களை போட்டுக்கிட்டு இருக்காங்க. இப்ப என்னன்னா அதுல ஒரு படி மேலே போயி டிக்‌ஷனரி வெப்சைட்டுகள்லயே ஷ்ரூவ்வ்வ் ன்னா என்னனு எக்ஸாம்பிளோட நீட்டி முழக்கி விளக்கமே கொடுத்திக்கிட்டு இருக்காங்க. கரண் அண்ணா ஆர்மி அங்கே வரைக்கும் போயிட்டாங்களான்னு சோஷியல் மீடியாவே இப்ப அதைப்பத்திதான் பேசிக்கிட்டு இருக்கு.

**@Thaadikkaran**

டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது- எம்.ஆர்.விஜயபாஸ்கர் # அப்போ மக்கள் மட்டும் சந்தோசமாவா இருக்காங்க சார்..!!

**@kumarfaculty**

96 படத்திற்குப் பிறகு

கெட் டுகெதருக்காக

நிறைய வாட்சப் குரூப்புகள் உருவாகும்.

உருவாக்கப்படும்…!!!

**@Suyanalavaathi**

டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது- எம்.ஆர்.விஜயபாஸ்கர் #

ஆனாலும் உங்க ஓனருக்கு எதிரா போராட்டம் செய்ய மாடீங்களே !!

**@ajmalnks**

ஜியோ வருகைக்கு பின் பலருக்கும் தியேட்டராக மாறிவிட்டது மொபைல்போன்.

**@being_riyas**

கமல்ஹாசன் : அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம்

மக்கள் : அப்போ தேர்தல் அப்போ ஓட்டு கேட்க அம்மாவும் நீயே ,அப்பாவும் நீயே னு பாடப்போறிங்க

**@kathir_twits**

டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது- எம்.ஆர்.விஜயபாஸ்கர் #

நீங்க வேணா சொந்த காசுல டீசல் போட்டு அரசுக்கு நல்லது பண்ணுங்களேன் !!

**@shivaas_twitz**

ரெட் அலெர்ட் வாபஸ் பெற்ற செய்தியை கண்ட பள்ளி குழந்தைகள் முகத்தில், திரும்பி வந்த தங்கமணியை கண்ட ஜனகராஜின் அதிர்ச்சி..!

**@shivaas_twitz**

வாழ்க்கையில் உண்மையான நட்பும், ஜீன்ஸ் பேன்ட்டும் ஒன்னே ஒன்னு இருந்தா போதும்…

எப்படியும் சமாளிச்சிடுலாம்..!

**ajmalnks**

தினகரன் எங்களுக்கும் தூது விட்டார்கள்-தமிழிசை

நீங்க அந்த அளவுக்கு ஒர்த் இல்லையே-நோட்டா

**@yuvi_creation**

#மழை பெய்றப்ப வெளில போகும் போது குடை பிடிச்சிக்கிட்டு போ நனையமாட்டனு வீட்ல சொல்வாங்க நம்பாத..!

@Vicky_stirring

எங்களை யாரும் விலை பேச முடியாது – தம்பிதுரை

ஏன் மோடி மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டரா உங்கள ?

**@shivaas_twitz**

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ‘பில்’லை பார்த்து அதிர்ச்சியாகும் நாம், உடனடி சிக்கனத்தை ‘டிப்ஸி’ல் காட்டிவிடுகிறோம்..!

**@sultan_Twitz**

ரெட் அலார்ட் மழைக்கு இல்ல சௌந்தரு..!! இடைத்தேர்தலுக்காம்!!

**@madurai_jinna**

தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை

ஏற்றுக் கொண்டால்.,

பா.ஜ.கவுடன்

கூட்டணி அமைப்பதில் தயக்கமில்லை – கமல்ஹாசன்

ஏத்துக்கலாம் ஆண்டவரே ! எல்லாம் அடுத்த “பிக்பாஸ் 3” வரைக்கும் தான.?

**@HAJAMYDEENNKS**

நோட்டா படத்தை புறக்கணிப்போம் என பிஜேபி சொல்லாதது ஆச்சர்யம்தான் !

**@HAJAMYDEENNKS**

சசிகலா எப்பவுமே சின்னம்மாதான் – செல்லூர் ராஜு #

தாய் பாசத்துல நம்மையே மிஞ்சிடுவார் போலயே _ தினகரன் மைன்ட் வாய்ஸ்

**@SaranyaaaRaj**

ஞாயிருக்கும் திங்களுக்கும் அதிக தூரம் தான்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு….!!

**@kathir_twits**

அவர் வசதியாய் வாழ்கிறார் என்ற வார்த்தை முற்று புள்ளியில் அவரின் கடின உழைப்பு பொய்த்து போகிறது மனங்களில் !!

**@Thaadikkaran**

ரெட் அலர்ட் பத்தி பேசிட்டு இருக்க, இங்கன ஒருத்தன் இன்னைக்கு மழை வராதுன்னு சொல்றான். எப்படிடா சொல்றேன்னு ஆச்சர்யமா கேட்டா இன்னைக்கு அவன் ஜெர்கின் கொண்டு வந்து இருக்கானாம்..!

– லாக் ஆஃப்!

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *