tமுதலிடத்தைத் தக்க வைப்போம்: மன்பிரீத் சிங்

public

இந்திய ஹாக்கி அணி, அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கவுள்ள 2017ஆம் ஆண்டிற்கான ஹீரோ ஆசிய கோப்பைக்கான தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரில் வெற்றி பெற்று ஆசிய ரேங்கிங்கில் முதலிடத்தைத் தக்க வைப்பதே எங்கள் நோக்கம் என இந்திய வீரர் மன்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணி தற்போது ஆசிய தரவரிசையில் 1100 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஹீரோ ஆசிய கோப்பைக்கான தொடரில் இந்திய அணி `ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இதே பிரிவில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக இத்தொடருக்கான 6 வாரங்கள் பயிற்சி இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் ஜோர்ட் மரிஜ்னே தலைமையில் நடைபெற்றது.

இது குறித்து இந்திய ஹாக்கி வீரர் மன்பிரித் சிங் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ** இந்தியா தற்போது ரேங்கிங்கில் முதல் இடத்துடன் இந்த தொடரைத் துவக்குகிறது. அதைத் தக்க வைப்பதே எங்களது குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம். எல்லா அணியும் வெற்றி பெரும் குறிக்கோளுடனே செயல்படும். எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல் வெற்றி பெற போராடுவோம். இந்திய ராணுவ வீரர்களுடனான பயிற்சிப் போட்டியில் கலந்து கொண்டு இந்திய ஹாக்கி அணி நல்ல ஃபார்மில் உள்ளது. ஜப்பான், வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்”** என்று கூறியுள்ளார்.

இதுவரை ஹீரோ கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக இரண்டு முறை தோற்றுள்ள பாகிஸ்தான் அணி, இம்முறை லீக் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் விளையாடவிருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிகளுக்கு முன்பு, இந்திய அணி அக்டோபர் 11ஆம் தேதி ஜப்பான் அணியுடனான போட்டியில் விளையாடுகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *