sபொங்கல் விடுமுறை நீக்கம்: தொடரும் கண்டனம்!

public

பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. தமிழகத்தின் பெருமைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. விவசாயிகளின் திருநாளான பொங்கல் பண்டிகையை மத்திய அரசு கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கியது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று தமிழக அரசியல்கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும், கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்கள் இதோ.

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா:

பொங்கல் திருநாள், தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை நாளாக இருந்த நிலை மாற்றப்பட்டு, விருப்ப விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவை அனைவரும் குடும்பமாகக் கொண்டாடி மகிழ விடுமுறை அளிப்பது மத்திய அரசின் கடமை. இந்த ஆண்டு பொங்கல் விழா சனிக்கிழமை அன்று தானே வருகிறது. அது விடுமுறை நாள்தானே என்று ஒதுக்காமல், பொங்கல் விழாவை மதிக்கும் வகையில் அதனை விடுமுறை நாளாக அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் அளிப்பது அவசியம். தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மத்திய அரசு உணர்ந்து ஏற்று, உடனடியாக தமிழர்களின் பெருமை மிகு பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும். ஜெயலலிதா மேற்கொண்ட அரும் முயற்சிகளால் தமிழர்களின் பல்வேறு உரிமைகள் நிலை நாட்டப்பட்டன. அதைப் போலவே, ஜெயலலிதா வழியில் என்றும் நடைபோடும் தமிழகம், பொங்கல் விழாவுக்கான விடுமுறையை மத்திய அரசு உடனடியாக அறி வித்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும், உரிமையையும் உறுதி செய்யும் என்று காத்திருக்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்:

பொங்கல் திருநாள் என்பது தமிழரின் ஒரே ஒரு பண்பாட்டு அடையாளம். பல்லாயிரம் ஆண்டு காலமாக தமிழர் வாழ்வியலோடு இணைந்த இந்த இனத்தின் அடையாளத் திருநாள். இதுவரை பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொதுவிடுமுறை விடப்பட்டு வந்தது. ஆனால் மத்திய பாஜக அரசோ இதை ரத்து செய்துவிட்டு விருப்ப விடுமுறையாக எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ளது. தமிழரின் மான உணர்ச்சியை சீண்டிப் பார்க்கும் இத்தகைய அறிவிப்புகளை இந்திய பாஜக அரசு உடனே திரும்பப் பெறுவதுதான் நல்லதாக இருக்கும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா:

பொங்கல் தின விடுமுறைக்கு எதிரான இந்த அறிவிப்பால் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு இடங்களில் பொங்கலைக் கொண்டாடும் தமிழர்கள் அனைவரும் மிகுந்த கொந்தளிப்புக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர். எனவே மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தலைவர் துரைப்பாண்டியன்

இந்த அறிவிப்பை மாற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பூஜா விடுமுறை கணக்கை சரி செய்வதற்காக இப்படி செய்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை தினத்தை கட்டாயம் விடுமுறை தினமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் யாரும் அலுவலகத்துக்குச் செல்ல மாட்டோம். இதைதான் எங்களால் செய்ய முடியும்.

எழுத்தாளர் பிரபஞ்சன்

பொங்கல் பண்டிகை என்பது ஒரு இனத்தின் அறுவடைத் திருவிழாவாக கருதப்படும் ஒரு பண்பாட்டு விழா. அதோடு உழவர்களும், உழவர்கள் சார்ந்த உயிரினங்களான மாடுகள் மற்றும் அது சார்ந்த கருவிகள், அனைவருக்குமான அன்பும் நன்றியும் பாராட்டும் விழாவாகவும், ஓர் இனம், பன்னூறு ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது. இந்த விழாவிற்கு விருப்ப விடுமுறை என்று சொல்வது ஒரு இனத்திற்கு எதிரான கருத்ததாக நான் பார்க்கிறேன். இது தமிழர்களின் அடிப்படை மற்றும் பண்பாட்டு திருவிழாவாக உள்ளதால், அனைவருக்குமான விடுமுறை நாளாக கருதப்பட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரின் விழாவாகவோ, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது அந்த மதத்தை ஏற்படுத்திய மனிதரின் விழாவாகவோ கருதி விருப்ப விடுமுறை தருகின்ற செயல்பாடு பொங்கலுக்கு பொருந்தாது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *