Rகேளிக்கை வரியை நீக்க வேண்டும்!

public

ஜி.எஸ்.டி. வரி, கேளிக்கை வரி, டிக்கெட் விலையேற்றம் முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து தனது கருத்தினை முன்வைத்து வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. அவர் தற்போது, “சினிமாவைக் காக்க வேண்டும் என்றால் கேளிக்கை வரியை நீக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகினர் கடந்த சில நாட்களாகக் கேளிக்கை வரி குறைப்பு மற்றும் திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இப்பேச்சுவார்த்தையில் வெள்ளியன்று (அக்டோபர் 13) சுமுக முடிவு எட்டப்பட்டது. அதன்படி தமிழ்ப் படங்களுக்கு 8 % கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக திரையரங்கு டிக்கெட் விலை 120 ரூபாயில் இருந்து 150ஆக (வரியைச் சேர்க்காமல்) உயர்த்தப்பட்டுள்ளது. கேளிக்கை வரியைச் சேர்த்தால், ரூ.150 + ஜிஎஸ்டி 28%(ரூ.42) + கேளிக்கை வரி 8% (ரூ.12 ) = ரூ.204 என ஒரு டிக்கெட்டின் விலையாகிறது.

இந்த முடிவு குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், **”திரைப்படங்கள் ஓடும் ஓடாது என்ற தொழில் நிலையாமையைக் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. தவிர மற்ற கேளிக்கை வரியை நீக்கி சினிமாவைக் காக்க எனது வேண்டுகோள்”** என்று பதிவிட்டுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *