Qமுடங்கிய நீர்மின் திட்டங்கள்!

public

‘நாடு முழுவதும் உள்ள 14 நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன’ என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசுகையில், “நாட்டில் 14 நீர்மின் திட்டங்கள் முடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் 25 மெகவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டன. இந்த 14 நீர்மின் நிலையங்களும் மொத்தமாக 5,055 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இவற்றின் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன.

பணிகள் முடங்கி வருவதால் இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்குத் தற்போது ரூ.25,593.78-க்கும் மேல் செலவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை மத்திய மின்சாரத்துறை ஆணையம் கணக்கிட்டுக் கூறியுள்ளது.

சுபன்ஸ்ரீ நீர்மின் திட்டத்திற்கு மட்டும் ரூ.11,149.8 கோடிக்கு மேல் செலவாகும். இங்கு 2,000 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யலாம். மகேஷ்வர் நீர்மின் திட்டத்துக்கு ரூ.5,223 கோடிக்கு மேல் செலவாகும். இங்கு 400 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யலாம்” என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *