nநான் கூறியது தவறு : சசிகலா ஆதரவாளர் வாபஸ்!

public

முதல்வர் ஓ.பி.எஸ். கையை வெட்டுவேன் என்று கூறிய தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் திடீரென தான் அவ்வாறு கூறவில்லை என்றும், நான் கூறிய வார்த்தைகள் தவறாக இருந்தால் அதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் கடந்த 1௦ஆம் தேதி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வி.பி.கலைராஜன் போயஸ் கார்டன் முன்பு செய்தியாளர்களுக்கு விடுத்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி நான் கூறிய வார்த்தை என்னவென்றால் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற வந்தால், அடித்து விரட்டுவோம் என்றும், அவர்கள் தாக்கினால் நாங்களும் தாக்குவோம். அப்போது கை போனால் என்ன, கால் போனால் என்ன என்று தான் நான் பேசினேன். போர்க்களம் என்றால் காயம் வரத்தான் செய்யும். அதர்மத்திடம் இருந்து தர்மத்தை பாதுகாக்கவே நான் அப்படி பேசினேன். முதல்வர் என்பதால் அவரை பற்றி நான் கூறிய வார்த்தைகள் தவறாக இருந்தால் அதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறினேன்.

வக்கீல் செல்லப்பாண்டி என்பவர் என் மீது இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்தார். அவரே அன்று மாலை அந்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆனால் இப்போது என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை நான் உயர்நீதிமன்றத்தில் சந்திப்பேன். என் மீது புகார் கொடுத்த வக்கீல் செல்லப்பாண்டியனை காணவில்லை என்று அவர்களது பெற்றோர்கள் கூறுகின்றனர். நான் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டுவதாக கூறுகின்றார்கள். தேனி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் எனக்கு மிரட்டல் வருகிறது. அதற்காக நான் அவர்கள் மீது புகார் கொடுக்கவில்லை. நான் கோழை அல்ல. யாருக்கும் நான் விலை போக மாட்டேன் என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *