nஆயுள் நீடிக்க சசிகலாவுக்கு ஆயுஷ்ய ஹோமம்!

public

பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையில் இருக்கும் சசிகலாவை 15 நாட்களுக்கு ஒரு முறை உறவினர்களும் வழக்கறிஞர்களும் அவரது அரசியல் கட்சியினரும் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த வகையில் கடந்த 8ஆம் தேதி தினகரனின் மனைவி அனுராதா, ஜெயா டிவியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக், சசிகலாவின் கணவரான மறைந்த நடராஜனின் சகோதரர்கள் என்று பல்வேறு நபர்கள் சசிகலாவைச் சந்தித்தனர். வெளியே இருந்து கூட்டமாக உள்ளே சென்றாலும் சசிகலாவை ஒவ்வொருவராகத் தான் சந்திக்கிறார்கள். அதனால், அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்களையும் தயக்கமின்றி தெளிவாகப் பேசுகிறார் சசிகலா.

அன்று உறவினர்களைத் தாண்டி சசிகலாவைச் சந்தித்த இன்னொரு முக்கியமான நபர் ஸ்ரீரங்கம் தேவாதி பட்டர். ஜெயலலிதா இருக்கும்போதே போயஸ் கார்டனுக்கு மிகவும் நம்பிக்கையானவரும் நெருக்கமானவருமாக இருந்தவர் ஸ்ரீரங்கம் தேவாதி பட்டர். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட எந்த யாகமாக இருந்தாலும், போயஸ் கார்டனில் நடக்கும் எந்த வைதீக வைபவமாக இருந்தாலும் அது தேவாதி பட்டர் இல்லாமல் நடக்காது. ஜெயலலிதா இறந்தபோது அவரை நல்லடக்கம் செய்யும் நிகழ்ச்சியிலும் சம்பிரதாய சடங்குகளை நடத்தி வைத்தவர் தேவாதி பட்டர்தான்.

கடந்த 8ஆம் தேதி சசிகலாவைச் சந்தித்த தேவாதி, உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படுவதாகச் சொல்லியிருக்கிறார் சசிகலா. அப்போது தேவாதி, ‘உங்களுக்கு ரேவதி நட்சத்திரம். இப்போது ஜாதகம் நன்னாதான் இருக்கு. ஆனாலும் ஜெயில்ல இருக்குறதனால உங்க உடம்பு பலவீனமாக இருக்கு. இந்த ரெண்டு மூணு வருஷமா அவமானம், அவச்சொல், வீண்பழி, சிறைவாசம்னு நீங்கப்பட்டதுக்கெல்லாம் பதில் சொல்ற மாதிரி நல்ல காலம் வரப்போறது. அதனால உங்க உடல்நலத்தை விருத்தி பண்றதுக்காக ஆயுஷ்ய ஹோமம் நடத்தணும்” என்று தேவாதி பட்டர் கூற சசிகலாவும் அதற்குச் சம்மதம் சொல்லியுள்ளார்.

மார்க்கண்டேய கோயிலில் சசிகலாவுக்கு ஆயுஷ்ய ஹோமம் நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம் தேவாதி. ஆயுஷ்ய ஹோமம் என்றால் குழந்தை பிறந்த முதலாம் ஆண்டு நிறைவு விழாவின்போது அக்குழந்தைக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்று இறைவனை வேண்டி நடத்தப்படும் ஒரு ஹோமம். அதேபோல சசிகலாவை ஒரு குழந்தை போல கருதி அவருக்கு இன்னும் நீண்ட ஆயுள் வாய்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆயுஷ்ய ஹோமம் நடத்தப்படுகிறது என்கிறார்கள் தேவாதி பட்டரின் வட்டாரத்தினர்.

மார்க்கண்டேய கோயில் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூரை அடுத்து மணல் மேடு என்ற ஊரில் இருக்கிறது. மேலும், கும்பகோணம் உப்பிலியப்பர் கோயிலிலும் மார்கண்டேயருக்கு சந்நிதி இருக்கிறது. இவை தவிர, கேரளாவிலும் மார்க்கண்டேயருக்குக் கோயில் உள்ளது. இந்த மூன்று இடங்களில் சசிகலாவுக்காக ஆயுஷ்ய ஹோமம் எங்கே நடத்தலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.

**

மேலும் படிக்க

**

.

[ டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/11/55)

.

[ மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்](https://minnambalam.com/k/2019/05/11/24)

.

[ ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/10/74)

.

.

[ திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!](https://minnambalam.com/k/2019/05/11/35)

.

[ இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!](https://minnambalam.com/k/2019/05/11/31)

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *