mசீனாவின் வீழ்ச்சி இந்தியாவுக்கு உதவும்!

public

சீனாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018ஆம் ஆண்டில் 7.3 சதவிகிதமாகவும், 2019ஆம் ஆண்டில் 7.4 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பானது கடைசியாக ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டை (7.5%) விடக் குறைவுதான். கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கான தனது மதிப்பீட்டை (2019) சற்று குறைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சீனாவைப் பொறுத்தவரையில், 2019ஆம் ஆண்டில் 6.2 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. முன்னதாக சீனாவின் வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது. சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தகத் தடைகளால்தான் சீனாவுக்கு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காவது மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தன்னை முன்னிறுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்று அருண் ஜேட்லி சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடும் அதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. இந்தியாவின் பணவீக்க விகிதம் 2018-19ஆம் ஆண்டில் 4.7 சதவிகிதமாக இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *