Lதிருவண்ணாமலைக்கு போக இ பாஸ்!

public

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் மகா தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதுபோன்று இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கவுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் எஸ்.பி.பவன்குமார் இன்று(நவம்பர் 6) ஆய்வு செய்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” நவம்பர் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி. நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மற்ற நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3000 உள்ளூர் பக்தர்களும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த 10 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 13 ஆயிரம் பக்தர்கள் என்ற அளவில் கட்டணம் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிமாவட்ட, மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்திட திருக்கோவில் [இணையதள](http://www.arunachaleswarartemple.tnhrce.in) வாயிலாக இணையதள முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நுழைவுச்சீட்டு என்ற முறையில் கட்டணம் இல்லாமல் இன்று முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

தீபத் திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் திருக்கோயில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடைபெறும். குறிப்பாக நவம்பர் 16 ஆம் தேதி மாடவீதிகளில் நடைபெற உள்ள 5 தேரோட்ட நிகழ்வினையும் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் வளாகத்திற்குள்ளே நடைபெறும்

நவம்பர் 17 பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை. தீபத் திருவிழா நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதி ஏதும் கிடையாது. ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை மற்றும் மாட்டுச் சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *