பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் தங்களான் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இரு படங்களும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன் பிறகு தள்ளிப்போனது.
அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62 குறித்த தகவல் வெளியானது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி,சித்தா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் விக்ரமின் 62 வது படத்தை இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை HR பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. விக்ரமின் 62 வது படத்திற்கு வீர தீர சூரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் என்றும் அதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகம் அதாவது prequel வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று(மே 11) தேதி வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி இருக்கிறது அந்த போஸ்டரில், நடிகர் விக்ரமும் நடிகை உஷாரா விஜய்யனும் இடம்பெற்று உள்ளனர்.
வீரதீரசூரன் படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விக்ரம் “சம்பவம் Loading” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.நீண்ட நாள் கழித்து ஒரு மாஸ் ஆக்ஷன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்னது டீக்கு சம்மர் ஸ்பெஷல் ஆஃபரா? அப்டேட் குமாரு
சன் குழுமத்தின் புது சேனல் “சன் ஹாலிவுட்”?