lஸ்மார்ட்போன் பயன்பாடு: ரூ.72 லட்சம் பரிசு!

public

ஸ்மார்ட்போன் வருகைக்கு பிறகு ஒவ்வொருவரும் அதன் சொல்படிதான் நடக்கிறோம். அந்தளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டோம். இதனால், படிப்பு, தூக்கம், வேலை போன்றவற்றில் தேவையான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இந்நிலையில், ஸ்மார்ட்போனை தவிர்க்கும் வகையில் தனியார் நிறுவனம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு ரூ.72 லட்சம் பரிசாக வழங்கப்படும் என விட்டமின்வாட்டர் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விட்டமின்வாட்டர் என்ற நிறுவனம், இந்த போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு ரூ.72 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை எவ்வாறு தவிர்க்க முடியும், அந்த நேரங்களில் என்ன செய்ய விருப்பம் போன்றவற்றிற்கு பங்கேற்பாளர்கள் சரியான மற்றும் புதுமையான பதில்களை #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக் சேர்த்து ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். இதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட 1996ஆம் ஆண்டின் போன் வழங்கப்படும். போட்டி முடியும் வரை இந்த போனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவிர, லேப்டாப், டெஸ்கடாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களின் போனையும் பயன்படுத்தக் கூடாது. ஜனவரி 22ஆம் தேதிக்குள் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒரு ஆண்டு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை உண்மை கண்டறியும் சோதனைக்கு பிறகே பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *