l‘குறிஞ்சி’யைக் கொண்டாடும் திண்டுக்கல்!

public

2018ஆம் ஆண்டை குறிஞ்சி விழா ஆண்டாக இரண்டு மாதங்கள் கொண்டாட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள், பலநூறு ஏக்கர் கணக்கில் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்கியுள்ளது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டை குறிஞ்சி விழா ஆண்டாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குறிஞ்சி பூத்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர், பின்னர் தன்னார்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாலோசனைக்குப் பின்னர் இந்தத் தகவலை கூறியுள்ளார். மேலும், 2018ஆம் ஆண்டில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்து குலுங்கியுள்ள பகுதிகளைச் சிறப்பாக புகைப்படம் எடுத்து, அதனை இரண்டு மாதங்கள், புகைப்படக் காட்சியாக பிரையண்ட் பூங்காவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பள்ளி மாணவ மாணவிகளை குறிஞ்சி பூத்துள்ள பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, அந்தப் பூவின் மகத்துவத்தை எடுத்துரைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும், குறிஞ்சி சுற்றுலாவை இரண்டு மாதங்கள் ஏற்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை கொடைக்கானல் நோக்கி ஈர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். இந்தத் திட்டங்கள் கொடைக்கானல் பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *