Kதாயகம் திரும்பிய மீனவர்கள்!

public

ஈரானில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் நான்கு மாதங்களுக்குப் பிறகு நேற்று சென்னை திரும்பினர்.

துபாயிலிருந்து கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த வினிஸ்டன் (கோடிமுனை), புத்தந்துறையை சேர்ந்த சிலுவை, சகாய சார்லஸ், அஜய் ஏஞ்சல், ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஆல்பிரட் நியூட்டன், ஜூடு ஹெர்பன், மண்டைக்காடு புதூரை சேர்ந்த ஜான் பிரகாஷ், திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த பாக்கியதாஸ், ஆண்டனி சூசை, கிளாட்வின், செங்கிஸ்கான், உதயகுமார், தூத்துக்குடியைச் சேர்ந்த யோனாஸ், கிராஸ்லின் என 15 மீனவர்கள் துபாய் நாட்டைச் சேர்ந்த ஜிம்மா சாலோம், அப்துல் ரஷித் என்பவர்களின் இரண்டு படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர் .

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. சில நாள்கள் சிறையிலும், பின்னர் ஈரான் துறைமுக அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பிலும் இவர்களது படகுகளிலேயும் தங்க வைக்கப்பட்டனர். சரியான உணவு மற்றும் மருந்துகளின்றி அவதிப்பட்ட இவர்களுக்குச் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி, மத்திய மாநில அரசுகள் மூலம் வைத்த கோரிக்கையை ஏற்று இவர்களுக்கு மருந்து மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.

அவர்களில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த கிராஸ்லின் என்ற மீனவர் பிப்ரவரி 6ஆம் தேதி சென்னை வந்தார். மற்ற 14 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜஸ்டின் ஆன்டணி மத்திய மாநில அரசுகளுக்கும் ஈரானிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தார்.

தங்களைச் சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடித் தொழிலில் முதலாளியும் விசா ஏஜெண்டும் ஈடுபடுத்துவதால், இவர்களில் பலரது விசா முடிவடைந்ததாலும் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடுமென இம்மீனவர்கள் கூறியதையடுத்து இவர்களை துபாய்க்கு அனுப்பாமல் இந்தியாவுக்கு அனுப்பக் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகள் மூலம் வைத்த இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் எட்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று (பிப்ரவரி 21) சென்னை வந்தடைந்தனர். இவர்களை ஜஸ்டின் ஆன்டணி வரவேற்றார். பின்னர் அனைவரும் சொந்த ஊருக்குச் சென்றனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *