jவிஷமாக மாறிய நிலத்தடி நீர்: மத்திய அரசு!

public

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆகியவற்றின் விளைவுகளால் இந்தியாவிலுள்ள 50 சதவிகித மாவட்டங்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜூலை 30) அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்கள் போன்றவற்றின் அளவு அதிகமாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிகமாக புளூரைடு, நைட்ரேட்கள் போன்ற ரசாயனங்கள் அளவுக்கு அதிகமாகக் கலந்துள்ளன. 386 மாவட்டங்களில் நைட்ரேட், 335 மாவட்டங்களில் புளூரைடு, 301 மாவட்டங்களில் இரும்பு, 212 மாவட்டங்களில் உப்பு, 153 மாவட்டங்களில் ரசாயனம், 30 மாவட்டங்களில் குரோமியம், 24 மாவட்டங்களில் காட்மியம் ஆகியவை நிலத்தடி நீரில் அளவிற்கு அதிகமாகவே உள்ளன. சில மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒன்றுக்கு மேற்பட்ட ரசாயனங்களின் அளவு அதிகமாக இருக்கிறது.

நீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களால், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றது. குடிநீரில் நைட்ரேட் கலந்திருந்தால், உடல் முழுவதும் முக்கிய ஆக்ஸிஜனைக் கொண்டிருக்கும் இரத்தத்தின் திறனில் குறைவு ஏற்படும். நீண்ட காலத்திற்கு ஆர்சனிக் நிறைந்த நீரைக் குடிப்பதனால், தோல் புற்றுநோய், சிறுநீர்ப்பை, சிறுநீரக மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *