jபாஜகவுக்கு மெஹபூபா முஃப்தி எச்சரிக்கை!

public

ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியை ,பாஜக உடைக்க முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி- பாஜக இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தது. கடந்த ஜூன் 19ஆம் தேதி பிடிபி கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மெகபூபா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.

87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்தில் பிடிபிக்கு 28 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். தேசிய மாநாட்டுக் கட்சி 15 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 12 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்தாலும் சட்டமன்றம் இன்னும் கலைக்கப்படாமலேயே உள்ளது. இதற்கிடையே, பிடிபி கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டு ஆட்சியமைக்க பாஜக முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா, “ பிடிபி கட்சியில் சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் வரை உடைத்து தன் பக்கம் கொண்டுவந்து பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. இதற்காக மிக அதிக தொகை பேரம் பேசப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் தங்களால் ஆட்சி அமைக்க இயலவில்லை என்ற நிலையில் ஆளுநர் இன்னும் ஏன் சட்டமன்றத்தைக் கலைக்கவில்லை? எதற்கு வெட்டியாக சம்பளம் கொடுக்க வேண்டும்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

இதேபோல் பிடிபி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மெகபூபாவின் குடும்பம் கட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும் கட்சியில் உயர் பதவிகளை தனது குடும்பத்தினருக்கே மெகபூபா வழங்குவதாகவும் குற்றம் சாட்டினர். பிடிபி கட்சியின் பலரும் மெகபூபா மீது அதிருப்தியில் உள்ளதாகவும் இவர்கள் பாஜகவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை 13) செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, மக்கள் ஜனநாயக கட்சியை டெல்லி உடைக்க முயற்சித்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அதனை எதிர்கொள்ள டெல்லி தயாராக வேண்டும்.

காஷ்மீரில் பிரச்னை தான் பெரிதாகும். சலாஹூதீன், யாசின் மாலிக் போன்ற ஏராளமான பிரிவினைவாதிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள். மாநிலத்தில் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் அதிகரிக்கும். நானும் அவர்கள் போன்ற சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே மெஹபூபா பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, விரக்தியில் உள்ள மெகபூபா இதுபோன்று பேசுவதாகவும், அவரது மோசமான ஆட்சியில் ஏற்கெனவே தீவிரவாதம் மீண்டும் உயிர் கொண்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *