jஅமேசான் வெற்றிக்குக் காரணமான இந்தியர்!

public

சர்வதேச அளவில் 1 லட்சம் கோடியைத் தாண்டிய மிகச் சில நிறுவனங்களின் பட்டியலில், அமேசான் நிறுவனம் விரைவில் இடம்பிடிக்கவிருக்கிறது. இதில் அலெக்ஸாவின் பங்கு அளப்பரியது. மனிதர்களின் பேச்சுக்கள் மூலம் இயங்கக்கூடிய இந்த அலெக்ஸாவைத்தான் தற்போது கூகுள் நிறுவனம் `Google Assistant’ என்ற பெயரிலும், ஆப்பிள் நிறுவனம் `Siri’ என்ற பெயரிலும் பின்பற்றிவருகின்றன.

2014ஆம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், அலெக்ஸாவை முதன் முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தார். இதை நாம் அறிந்திருப்போம். ஆனால் அதற்குப் பின்னால் இருந்து இயங்கிய மூளையை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அலெக்ஸாவின் உருவாக்கத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த ரோஹித் பிரசாத் என்ற இந்தியரின் மூளை தான் அது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் பிரசாத். இவரது முயற்சிதான் அலெக்ஸாவின் கடந்த ஐந்து ஆண்டு வளர்ச்சி. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்; 2017ஆம் ஆண்டு அலெக்ஸா இந்தியாவில் அறிமுகமாகி, அப்போது இங்குப் பிரபலமடைந்திருந்த `Google Assistant’ சேவையின் சாதனையை முறியடித்துக் காட்டியது.

அமேசான் அலெக்ஸாவின் வளர்ச்சியில் பிராசாத்துடன் சேர்த்து டோனி ரெய்ட் என்பவருக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இருவரும் அமேசானின் நுகர்வோர் சேவைத் துறையில் பணியாற்றி வந்தனர். இதற்கு முன்னதாக பிரசாத் `பிபிஎன் டெக்னாலாஜி’ என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் 14 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தான் DAV பள்ளியில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை படித்ததாகவும், `பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ என்ற கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றதாகவும் நேர்காணல் ஒன்றில் பிரசாத் தெரிவித்திருந்தார்.

1997ஆம் ஆண்டு `Electronics and communication’ துறையில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், முதுநிலை படிப்பை `இல்லி னாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். அங்கு தான் அவருக்குப் பேச்சுக்களை அங்கீகரிக்கும் தொழில்நுட்பத்தின் `speech-recognition technology’ மீதான ஆர்வம் வந்திருக்கிறது. பின்னர் 14 ஆண்டுகள் பிபிஎன் நிறுவனத்தில் பணியாற்றியபோது இது குறித்த தெளிவைப் பெற்றார். பின்னர் 2013ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தில் சேர்ந்து, தான் கற்ற அனைத்துத் திறமைகளையும் ஒன்றிணைத்து அலெக்ஸா என்னும் கருவியை வடிவமைக்கத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அலெக்ஸா உருவாக்கத்தின் தலைமை ஆராய்ச்சியாளராகப் பதவி உயர்வு பெற்றார்.

மனிதர்களின் கற்பனையால் மட்டுமே முடிந்த ஒன்றை நிஜ வாழ்வில் உருவாக்கியது தொடர்பான அனுபவம் குறித்து அதே நேர்காணலில் பேசிய அவர், ஸ்டார் ட்ரெக் காலத்தில்தான் நாங்கள் வளர்ந்தோம். அதுவே எங்களது தூண்டுதலாகவும் அமைந்தது” என்று கூறியுள்ளார். `ஸ்டார் ட்ரெக்’ என்பது 2009ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க விண்வெளி ஓபேரா ஊடகத்தின் அறிவியல் புனைகதை அடிப்படையிலான தொலைக்காட்சித் தொடராகும்.

அமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஹோம் உள்ளிட்ட சேவைகளால் தற்போது அலெக்ஸா தொழில்நுட்பம் உலகம் முழுதும் பிரபலமடைந்து வருகிறது. மனிதர்களின் பேச்சுக்களை கொண்டு இயங்கும் இந்த அலெக்ஸாவின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்து, சர்வதேச அளவில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்துள்ளார் ரோஹித் பிரசாத்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *