ISky Scraper: மன தைரியத்தின் உச்சம்!

public

‘The Rock’ என அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் த்வெய்னே ஜான்சன் ‘ஃபேட் ஆப் த பியூரியஸ், ஜூமாஞ்ஜி, ரேம்பேஜ்’ என 2017ஆம் ஆண்டின் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து லெஜன்டரி பிச்சர்ஸ், யூனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான செவன் பக்ஸ் தயாரிப்பில் ராவ்சன் எம்.தர்பர் இயக்கத்தில் ‘ஸ்கை ஸ்க்ராப்பர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ‘சென்ட்ரல் இண்டெலிஜன்ஸ்’ எனும் காமெடி த்ரில்லர் திரைப்படத்தை அடுத்து ராவ்சன் – ராக் கூட்டணியின் இரண்டாவது திரைப்படம் இது.

ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் ட்ரெயிலரில் அமெரிக்காவின் FBI மீட்புத் தலைமை அதிகாரியாக வேலை செய்யும் ராக், மீட்புப் பணியின்போது நடந்த விபத்தில் ஒரு காலை இழந்துவிடுகிறார். பிறகு சீனாவைச் சேர்ந்த உலகின் மிக உயரமான கட்டடத்திற்கு பாதுகாப்புக் காவலராக வேலைக்குச் சேர்கிறார். ஒருநாள் ராக்குடன் வேலை செய்யும் நண்பன் ஏதோவொரு காரணத்தால் கட்டடத்துக்குத் தீ வைத்துவிடுகிறார். அக்கட்டடத்தில் ராக் மற்றும் அவரது மனைவி குழந்தைகளும் சிக்கிக் கொள்கின்றனர். கட்டடத்தில் சிக்கிக்கொண்ட தனது குடும்பத்தைக் காப்பாற்றவும், கட்டடத்துக்குத் தீ வைத்ததன் காரணத்தைக் கண்டுபிடிக்கவும் ராக் எப்படியெல்லாம் முயற்சிக்கிறார் என்பதை இந்தப் படம் விளக்குகிறது. புஜபல பராக்கிரமசாலியாக நடிப்பதை விட்டுவிட்டு, ஒரு கால் இல்லாத குறை இருந்தாலும் மனதளவில் எத்தனை நம்பிக்கையுடன் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் கட்டமைப்பில் எப்படி சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் காணலாம் என இயக்குநர் ராவ்சன் கூறியிருக்கிறார்.

[ஸ்கை ஸ்க்ராப்பர் ட்ரெய்லர்](https://youtu.be/t9QePUT-Yt8)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *