Iமிஸ்டர் லோக்கல் தாமதம் ஏன்?

public

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் தொடங்கிய அன்றே மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று திடீரென மிஸ்டர் லோக்கல் மே 17 அன்று வெளியாகும் என்று இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதனைக் குறித்து படத்தயாரிப்புத் தரப்பிடம் கேட்கும்போது, “படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி முடியவில்லை. அதனால் அவசரமாக வேலைகளை முடித்து படத்தின் தரத்தை எந்த விதத்திலும் குறைத்து விடக்கூடாது என்பதில் கவனமாகவுள்ளோம். எனவே கொஞ்சம் தாமதமானாலும் தவறில்லை, நல்ல தரமான பொழுதுபோக்குப் படத்தை அளித்தோம் என்கிற பெயரைப் பெறவேண்டும் என்பதால் இந்தத் தேதி மாற்றம்” என்கிறார்கள்.

இதுகுறித்து விநியோகிஸ்தர்கள் மத்தியில் விசாரித்த போது, “இன்று வெளியாகியிருக்கும் லாரன்ஸின் காஞ்சனா – 3 படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்கிறபோது குறைந்த பட்சம் மூன்று வாரங்கள் வரை படத்தை ஓட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒப்புக் கொண்ட பின்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் காஞ்சனா – 3 படம் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 450 திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட முடியாது.

அதோடு ஏப்ரல் 26 அன்று மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற ஆங்கிலப் படமும் வெளியாகவிருக்கிறது. அதிக எதிர்பார்ப்பில் உள்ளதால் அவை 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழகத்தில் மொத்தம் இருப்பது 1100 திரையரங்குகள். இவற்றால் மிஸ்டர் லோக்கல் படத்துக்கு முக்கிய நகரங்களில் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தேதி மாற்றம்” என்று கூறுகின்றனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *