iபாக்கெட் உணவுகள் : நீடிக்கும் குழப்பம்!

public

நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதில் உணவுப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. எனினும் உணவுப் பொருட்களுக்கான வரி விதிப்பு விவகாரத்தில் சில குழப்பங்கள் இருந்து வருகிறது.

பாக்கெட் செய்யப்படாத அரிசி, கோதுமை, பாலாடை, பனீர், தேன், மாவு, பருப்பு வகைகள், தானிய வகைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் பெயர் பதிவு செய்யப்பட்டும், முத்திரை பதிக்கப்பட்டும் விற்கப்படும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கும், கண்டயினர்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

முத்திரையுடன் வரும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டும் வரி விதிக்கப்படுவதால், நிறுவனங்கள் தங்களின் பதிவீட்டை ரத்து செய்யக்கோரி டிரேட் மார்க் (முத்திரை) அலுவலகத்தை அணுகுகின்றன. பதிவீட்டை ரத்து செய்துவிட்டு, முத்திரையின்றி பாக்கெட் செய்து விற்றால் 5 சதவிகித வரியை தவிர்க்க முடியும் என்பதால் நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசிக்கும் எனவும், பாக்கெட் செய்து விற்கப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகள் சரிசெய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *