gஉதான் திட்டம்: ரூ.2,500-க்கு விமானப் பயணம்!

public

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும், சாமானிய மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உதான் திட்டம் கொண்டுவரப்பட்டது. லாபம் வரக்கூடிய வழித்தடங்களைக் கண்டறிந்து, அங்குள்ள மக்களுக்கு எளிதாக விமான சேவை கிடைக்கும்வகையில் உதான் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், எந்தெந்த நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து ஏற்படுத்தலாம், அதற்கு எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு, முதற்கட்டமாக, 45 நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ் ஜெட், ஏர் டெக்கான், ஏர் இந்தியா, ஏர் ஒடிசா, டர்போ ஆகிய விமான நிறுவனங்கள் இந்தச் சேவையில் ஈடுபட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏர் இந்தியா நிறுவனம் 15 வழித்தடங்களிலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 11 வழித்தடங்களிலும், டர்போ நிறுவனம் 18 வழித்தடங்களிலும், ஏர் டெக்கான் 34 வழித்தடங்களிலும், ஏர் ஒடிசா 50 வழித்தடங்களிலும் சேவை வழங்கவிருக்கின்றன. மொத்தம் 45 நகரங்களில், 128 வழித்தடங்களில் இந்த உதான் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. மத்திய விமானப் போக்குவரத்து துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த செலவில் விமான சேவை வழங்கும் இத்திட்டத்தை பிரதமர் மோடி நேற்று (27-04-17) தொடங்கி வைத்தார்.

மிகக் குறைந்த கட்டணத்தினாலான இந்த விமானச் சேவை சிம்லா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கிடையே இன்று (28-04-17) துவங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிம்லா – டெல்லி இடையேயான விமானக் கட்டணம் ரூ.2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், ஏர் டெக்கன், ஏர் ஒடிசா மற்றும் டர்போ ஆகிய ஐந்து நிறுவனங்கள் உதான் திட்டத்தின் கீழ் சேவை வழங்க, 19 முதல் 78 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய விமானங்களையும் பயன்படுத்தவிருக்கின்றன. இந்த விமானக் கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு மணிநேரம் வரையிலான பயணம் மற்றும் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *