Fஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை!

public

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மே மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.17,811 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.24,462 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ.49,891 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதிக்காக ரூ.24,875 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. செஸ் வரியாக ரூ.8,125 கோடி என, மே மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ.1,00,289 கோடியை அரசு வசூலித்துள்ளது.

ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி 3பி ரிட்டன்களை மே 31 வரையில் மொத்தம் 72.45 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். அரசு தரப்பிலிருந்து மத்திய ஜிஎஸ்டியாக ரூ.18,098 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.14,438 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மே மாதத்துக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் மத்திய ஜிஎஸ்டியில் ரூ.35,909 கோடியும், மாநில ஜிஎஸ்டியில் ரூ.38,900 கோடியும் ஆகும். 2018ஆம் ஆண்டின் மே மாதத்தில் அரசின் வரி வருவாய் ரூ.94,016 கோடியாக இருந்தது. இந்த ஆண்டின் மே மாதம் வரி வருவாய் 6.67 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *