மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜுன் 2019

திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!

திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!

சேலத்தில் மேம்பாலம் திறப்பு விழாவில் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வரும்வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாநகரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு 320 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. இப்பாலத்தின் ஒரு பகுதியான ஏற்காடு சாலையிலிருந்து ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையில் ஏ.வி.ஆர் ரவுண்டானா செல்லும் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 7) திறந்து வைத்தார். இந்த பாலத்தை திறந்து வைத்ததன் மூலம் சுமார் 7 லட்சம் பேர் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் தொகுதி திமுக எம்.பி, எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நடந்து கொண்டிருக்கும்போது அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது தலைவர்களை வாழ்த்தி முழக்கம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திறப்பு விழாவின்போது சுவாரஸ்யமான சம்பவமும் நடந்தேறியது. விழா முடிந்த பின்பு மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினருடன் மேம்பாலம் திறக்கும் இடத்துக்கு சென்று விட்டார். அங்கே சென்றபின் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வராததைக் கண்டவர், உடனே அவர்களையும் அழைத்துவரச் சொன்னார். இருவரும் வரும் வரை சுமார் 10 நிமிடம் காத்திருந்து பின்னர் மேம்பாலத்தை திறந்துவைத்தார்

விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.பார்த்திபன், “திறப்பு விழா குறித்து முறையான அழைப்பு ஏதும் வரவில்லை. முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் கலந்துகொண்டு தொகுதிக்கான கோரிக்கை குறித்து பேச நினைத்திருந்தேன். ஆனால் யாரையும் பேச அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது” என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

வெள்ளி 7 ஜுன் 2019