Eதினகரனின் ஆன்மீக அரசியல்!

public

தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (மார்ச் 5) கன்னியாகுமரிக்கு விசிட் செய்தார்.

குமரி மாவட்டத்தில் அவர் நடத்திய சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குமரிக்குச் செல்வதற்கு முன்ன்னரே தினகரன் மார்ச் 4 ஆம் தேதி நெல்லையில் சிஎஸ்சி ஆயரை சந்தித்தார்.

அப்போது சிறுபான்மையினர் வாக்குகள் அமமுகவுக்கு வரவேண்டும் என்று அவரிடம் அமமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து குமரி சென்ற தினகரன் பகவதி அம்மன் திருக்கோயில், சாமித் தோப்பு வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ததோடு குமரி கிறிஸ்துவ ஆயர்கள் என முக்கியமான ஆன்மீகத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

குமரியில் ஒரே நாளில் தினகரன் மேற்கொண்டுள்ள வியூகம் மூலம் சிறுபான்மை மற்றும் அய்யாவழி பக்தர்களின் வாக்குகளை அறுவடை செய்யத் தீவிரம் காட்டுவது தெரிந்தது. இதற்கிடையே குமரி மாவட்டத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவும் தினகரன் மறக்கவில்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *