eசென்னை: குறையும் தண்ணீர் தட்டுப்பாடு!

public

மெட்ரோ குடிநீருக்கான தேவை சென்னை வாசிகளிடையே குறைந்து வருவதாக மெட்ரோ குடிநீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவியது. சென்னைக்கு நீர் வழங்கும் முக்கியமான நீராதாரங்கள் வற்றிவிட்டதால் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. காலிக் குடங்களுடன் தண்ணீர் லாரிகளுக்காகத் தெருக்களில் மக்கள் மணிக் கணக்கில் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. சென்னை மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து போர்க்கால அடிப்படையில் ரயில் மூலமாகத் தண்ணீரைக் கொண்டுவரும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டது. மெட்ரோ குடிநீரை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தியது. சென்ற வாரம் ‘டயல் ஃபார் வாட்டர் 2.0’ என்ற முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது மெட்ரோ குடிநீருக்கான முன்பதிவுகள் குறைந்துள்ளதாக மெட்ரோ குடிநீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “முன்பு ஒரு குடியிருப்பில் உள்ள அனைவரும் மெட்ரோ குடிநீரை முன்பதிவு செய்து தண்ணீர் அதிகம் கிடைக்க வேண்டும் என்று முயற்சிப்பர். ஆனால் இப்போது புதிய செயல்முறையில் முன்பதிவு செய்த பின்னர் அதை கேன்சல் செய்ய முடியாது; பணத்தைத் திரும்பப் பெறவும் முடியாது என்பதால் இப்போது அதுபோல நடப்பதில்லை. அதோடு, சமீபத்தில் ஓரளவுக்கு மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டமும் சற்று உயர்ந்துள்ளது.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,100 முன்பதிவுகளை மட்டுமே நாங்கள் ஏற்போம். ஆனால் இப்போது அதில் 60 சதவிகித முன்பதிவுகள் மட்டுமே வருகின்றன. அத்தியாவசியமாகக் குடிநீர் தேவைப்படுபவர்கள் முன்பதிவு செய்தால் அவர்களுக்கு 48 மணி நேரத்துக்குள் குடிநீர் விநியோகிக்கப்படும். 24 மணி நேரத்துக்குள் குடிநீரைப் பெறுவதற்கான வசதியும் உள்ளது. சென்னை மக்களிடையே குடிநீருக்கான தேவை தற்போது குறைந்துள்ளதால் எங்களால் இப்போது அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் குடிநீரை விநியோகிக்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு வாசிகளுக்கு 3,000 லிட்டருக்கு 400 ரூபாயும், அலுவலகங்களுக்கு 500 ரூபாயும் மெட்ரோ குடிநீருக்குக் கட்டணமாகப் பெறப்படுகிறது. குடியிருப்பு வாசிகள் தங்களது தேவையைப் பொறுத்து ரூ.475 ரூபாய் கொடுத்து 6,000 லிட்டர் தண்ணீரைப் பெறமுடியும். அலுவலகங்களுக்கு இதற்கான விலை ரூ.700 ஆகும்.

**

மேலும் படிக்க

**

**[சாக்‌ஷி இருக்க சரவணன் ஏன்?](https://minnambalam.com/k/2019/08/07/20)**

**[இதற்காகத்தான் காத்திருந்தேன்: விடைபெற்ற சுஷ்மா](https://minnambalam.com/k/2019/08/07/23)**

**[திண்டுக்கல்லைச் சுற்றும் கார்த்தி டீம்!](https://minnambalam.com/k/2019/08/06/36)**

**[டிஜிட்டல் திண்ணை: நண்பர் சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா?](https://minnambalam.com/k/2019/08/06/81)**

**[அதிமுகவை திமுகவுக்கு விற்கிறார் சத்யா -போராட்டத்தில் அதிமுகவினர்!](https://minnambalam.com/k/2019/08/07/42)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *