dஜி.எஸ்.டி. குழுவிடம் ரயில்வே கோரிக்கை!

public

தங்களை ஒன்றுபட்ட நிறுவனமாகக் கருத வேண்டும் என்றும், உள் விநியோகத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. குழுவிடம் ரயில்வே துறை கோரிக்கை வைத்துள்ளது. ஜி.எஸ்.டி. குழுவிடம் ரயில்வே நிர்வாகம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஜி.எஸ்.டி. குழுவின் தலைவரான மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி-யின் தற்போதைய பரிந்துரையின்படி ரயில்வே நிர்வாகம் தனது 17 மண்டலங்கள் அல்லது 73 பிரிவுகளைத் தனித்தனியாக பதிவுசெய்து கொள்ள வேண்டும். மேலும், தங்களது சொந்த பொருள்களான ரயில் பெட்டிகள், இருப்புப் பாதைகள் போன்றவற்றை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பினாலும் வரி செலுத்த வேண்டும். இதற்குத்தான் ரயில்வே தரப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியா முழுவதற்கும் ஒருங்கிணைந்த நிறுவனமாக ரயில்வேயைக் கருத வேண்டும் என ஜி.எஸ்.டி. குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் சொந்த பொருள்கள் மற்றும் உபகரணங்களைப் பரிமாற்றம் செய்வதற்கு வரி விதிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஒரு பகுதியில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிக்கு வேறு மாநிலத்திலும் வரி விதிக்கப்படுவது நியாயமில்லை.

மேலும், விற்கப்படும் ஒவ்வொரு பயணச்சீட்டுக்கும் தனித்தனியாகப் பொருள் விவரப்பட்டியலைத் தாக்கல் செய்யவும் ஜி.எஸ்.டி. குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது பயணச்சீட்டு குறித்து மொத்தமாகத் தகவல் அனுப்புகிறோம். தனித்தனியாகப் பொருள் விவரப்பட்டியல் அனுப்ப வேண்டும் என்பது அதிக தொழில்நுட்ப மற்றும் கணக்கியல் பிரச்னைகளை ஏற்படுத்தும்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டப்பின் ரயில்வேயின் உள்ளீடு மற்றும் வெளியீடு சேவைகள் விலை உயரும் எனக் கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *