dஜார்ஜ் லூகாஸ் ரசிகர்களுக்கு அட்வைஸ்!

public

ஸ்டார் வார்ஸ் படங்களை உருவாக்கிய இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் தன்னிடம் ஆட்டோகிராஃப் பெற வரும் ரசிகர்களிடம் வேறு உருப்படியான வேலையை பார்க்கச் சொல்லி புத்திமதி கூறியுள்ளார். ஸ்டார் வார்ஸ் என்ற பெயரில் இதுவரை 7 பாகங்கள் வெளிவந்து மெகா ஹிட் அடித்துப் படா வசூல் பெற்றப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உயிர்களுக்கும், விண்வெளியில் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் உயிர்களுக்கும் இடையே நடக்கும் ஆதிக்கப் போட்டி. அதாவது நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்று இரு தரப்பினரும் போட்டுக் கொள்ளும் சண்டைதான் படத்தின் கதை. இதுவரை இந்த ஒரே விஷயத்தை வைத்து 7 பாகங்களை எடுத்துள்ளார்.

ஜார்ஜ் லூகாஸ் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களின் கையெழுத்துகளை இணையத்தில் விற்று சிலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். இது தொடர்பாக நியூயார்க்கில் ஜார்ஜ் லூகாஸிடம் ஆட்டோகிராஃப் பெற சில ரசிகர்கள் முந்தினர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த லூகாஸ், கூடிய ரசிகர் கூட்டத்தோடு விவாதிக்க ஆரம்பித்தார். **ஏன் என்னிடம் பணம் இருக்கிறது, உங்களிடம் இல்லை தெரியுமா? நான் என் நேரத்தைக் கையெழுத்துகள் வாங்கச் செலவழிக்காமல் படங்கள் எடுக்கச் செலவழித்தேன்** என்றார். மேலும் நேர்மையான வழியில் வாழவும் அறிவுறுத்தினார்.மேலும் ரசிகர் கூட்டத்தில் ஒருவர் தனக்கு படங்கள் இயக்க வழியில்லை என்று சொன்னபோது இன்னும் கோபமடைந்த லூகாஸ், **நானும் உங்களைப் போல தான் ஆரம்பித்தேன். அப்போது என் கையிலும் எதுவும் இருக்கவில்லை** என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *