dகட்டி முடிக்கப்பட்ட 38 லட்சம் வீடுகள்!

public

அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2016-18 காலப்பகுதியில் 38.22 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-18 காலப்பகுதியில் 51 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் 38.22 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 75 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2019 மார்ச் 31ஆம் தேதிக்குள் 1 கோடி வீடுகளும், 2022ஆம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகளும் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வருகிற 47 லட்சம் வீடுகள் இறுதிகட்டப் பணிகளில் உள்ளன. இந்த ஆண்டு டிசம்பருக்குள் 1 கோடி வீடுகளை கட்டி முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரையில் 76 லட்சத்துக்கும் அதிகமானப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 63 லட்சம் பயனாளிகள் வீடுகளைப் பெறுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் அதிக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *