bவிலைக் குறைப்பால் கார் விற்பனை ஜோர்!

public

சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதை முன்னிட்டு இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையைக் குறைத்து விற்பனை செய்ததால் கடந்த ஜூலை மாதத்தில் கார் விற்பனை சூடுபிடித்துள்ளது.

வாகனச் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் 22.4 சதவிகித உயர்வுடன் 1,54,001 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 1,25,778 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை ஜூலை மாதத்தில் 10.23 சதவிகிதம் உயர்ந்து, 14,933 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் அதிக வாடிக்கையாளர்கள் டாடா கார்களை ஆர்வமாக வாங்கிச் சென்றதாக அந்நிறுவன பயணிகள் வாகனப் பிரிவின் தலைவரான மாயங்க் பாரீக் தெரிவித்தார்.

ஜூலை மாதத்தில் 18.96 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள ஃபோர்டு நிறுவனம் மொத்தம் 8,418 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதுபற்றி ஃபோர்டு இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநரான அனுராக் மெஹ்ரோத்ரா கூறுகையில், “சிறப்பான பருவமழை, எளிய வாகனக் கடன், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் பண்டிகை சீசன் ஆகியவற்றை முன்னிட்டு எங்களது வாகன விற்பனை சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 13 சதவிகித உயர்வுடன் உள்நாட்டில் 39,762 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல, ஹோண்டா நிறுவன வாகன விற்பனையும் 21.74 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2016 ஜூலையில் 14,033 கார்களை விற்பனை செய்திருந்த இந்நிறுவனம் இந்தாண்டு ஜூலையில் 17,085 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனமும் ஜூலை மாதத்தில் 43,007 கார்களை விற்பனை செய்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *