bகாஷ்மீரில் தாக்குதல்: 18 வீரர்கள் பலி!

public

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலுள்ள அவாந்திபோரா ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில், இன்று (பிப்ரவரி 14) சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்றனர். அப்போது ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அந்த வாகனத்தின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தினர். சாலையில் சென்ற 70 வாகனங்களில் இந்த ஒரு வாகனத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஐடி வெடிகுண்டு தாக்குதலையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 18 வீரர்கள் பலியாகினர்; 40 பேர் காயமடைந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், பாதுகாப்புப் படையினரின் மீதான மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. நான்கு பெரிய ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் ராணுவப் படைத் தலைமையகத்தைக் குறி வைத்து தாக்கிய அச்சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் இது என்று தெரிவித்துள்ளார். “சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறேன். பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சுகிறேன். இந்த துயரத்தின்போது இந்தியா ஒற்றுமையாக நிற்க வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். வீரமிக்க 18 வீரர்கள் தியாக மரணமடைந்துள்ளனர்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் வீணாகப் போகாது. முழு தேசமும் துணிச்சலான தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *