குழந்தை விற்பனை : உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை!

public

மதுரையில் போலி இறப்பு ஆவணங்கள் மூலம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மதுரையில் உள்ள இதயம் அறக்கட்டளை என்ற முதியோர் காப்பகத்தில் இருந்து வந்த இரண்டு குழந்தைகளை போலி ஆவணங்கள் தயாரித்து, விற்பனை செய்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விற்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டாலும், இதுகுறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளரிடம் மனுவொன்று அளித்துள்ளார்.

அதில்,” மதுரை ஆயுத படை குடியிருப்பில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தை தவறாக பயன்படுத்தி, கொரோனாவால் குழந்தைகள் உயிரிழந்ததாக போலி ஆவணங்களை தயாரித்து அந்த குழந்தைகளை தனிநபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த குழந்தை விற்பனையை மருத்துவம் சார்ந்த தீவிர குற்றமாக கருத வேண்டும்.

சிவக்குமார் பெயரளவில் முதியோர் இல்லத்தை நடத்தி அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை நம்ப வைத்து மாநில அரசிடமிருந்து விருது பெற்றுள்ளார். இந்த விருதை பெறுவதற்கும் அவர் ,காவல் துறையுடன் இணைந்து ஆதரவற்ற பிரதேங்களை அடக்கம் செய்வது போல் பல்வேறு புகைப்படங்களை தாக்கல் செய்துள்ளார்.

முதியோர், நலிவடைந்தோர், ஆதரவற்ற பெண்கள் மீட்பு மையம் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலருக்கும் தொடர்புள்ளது. தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களிலும் குழந்தைகளை விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளது.

காப்பக பதிவேடுகளில் 18 குழந்தைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இரு குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 16 குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் கைது செய்யப்படவில்லை. அவர் ,வெளி மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம். எனவே ,இவ்வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரிப்பதில் சிரமம் உள்ளதால் ,சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *