O74 வயது இளைஞரின் புதுவித ஆட்டோ!

public

ஜங்ஷன் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு வயது 74. 10 ஆண்டுகளுக்கு முன்பு டைலர் ஆக தொழில் செய்து வந்த இவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிகிறார். ஆயத்த ஆடைகள் விற்பனை அதிகரிக்க தொடங்கிய நிலையில், இவரது தொழிலில் வருமானம் மிகவும் குறைந்தது. அதனால் ஆட்டோ ஓட்டுனரான தனது மகனின் ஆட்டோவை ஓட்டிப் பார்த்து ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டார்.

வருமானத்திற்கு மாற்று வழியாக ஆட்டோவை தேர்ந்தெடுத்த சுப்பிரமணி, தனக்கென ஒரு ஆட்டோவை வாங்கி அதில் பயணிகளுக்கு ஏற்ற வகையில் பிரத்தியேக ஏற்பாடுகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க ஆட்டோவின் மேல் பகுதியில் நெல் மற்றும் சோளத்தட்டுகளால் கூரை அமைத்து அதனை ஈரப்படுத்தி வடிவமைத்திருக்கிறார்.

ஆட்டோவில் செல்பவர்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் ஆட்டோவில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் இவரின் ஆட்டோவில் செல்ல விரும்புகின்றனர். எனவே சுப்பிரமணியின் ஆட்டோவிற்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. மேலும் காலை நேரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் இவர் பள்ளி குழந்தைகளுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க ஆட்டோவிற்கு கலர் கலராக லைட் அமைத்து குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க செய்துள்ளார்.

அவசரத் தேவைகளுக்காக ஆட்டோவில் வருபவர்களுக்கு தாகம் தணிக்க அவர் தண்ணீரையும் உடன் வைத்துள்ளார் தொழிலில் நேர்மையும் அதில் ஆர்வமும் செலுத்தி தனது ஆட்டோவை புதிதாக மாற்றியுள்ளார். தினந்தோறும் பிற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை விட தனக்கு கூடுதலாக கிடைப்பதாகவும் இதனால் மனதுக்கு நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரது புதிய முயற்சிகளை பார்த்து பலரும் மனம் விட்டு பாராட்டி வருகின்றனர். 74 வயதில் புத்துணர்ச்சியோடு, புது முயற்சிகளோடு உழைக்கும் இவரை முதியவர் என்று சொல்ல மனம் வரவில்லை, இளைஞர் என்றுதான் சொல்ல வேண்டும்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *