மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

ஆளுநர் கையெழுத்திடும் வரை பயணம்: அற்புதம்மாள்

ஆளுநர் கையெழுத்திடும் வரை பயணம்: அற்புதம்மாள்

எழுவர் விடுதலைக்கு ஆளுநர் கையெழுத்திடும் வரை தனது மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எழுவர் விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடந்தாலும், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பயணிக்க உள்ளதாக அறிவித்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக நீதி கேட்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நடிகர்கள் சத்யராஜ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தனது மக்கள் சந்திப்பு பயணத்தை அற்புதம்மாள் நேற்று கோவையில் தொடங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், “என்னுடைய நியாயமான போராட்டத்திற்கு இத்தனை நாள் துணை நின்றதுபோல, எழுவர் விடுதலைக்குத் தொடர்ந்து துணை நிற்க வேண்டும். ஏழு பேரும் சிறை சென்று 28 வருடங்கள் ஆகப் போகிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து நான்கரை மாதங்கள் ஆகப் போகிறது. அமைச்சரவை முடிவெடுத்தாலும் ஆளுநர் இதுவரை கையெழுத்து இடவில்லை. கோவையை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொண்டு அனைத்து ஊர்களுக்கும் நான் செல்லவுள்ளேன். எழுவர் விடுதலைக்கு ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய இந்தப் பயணம் தொடரும். அவரின் கையெழுத்துதான் இதற்கு இறுதி முடிவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வெள்ளி 25 ஜன 2019