[ஹாக்கி: ஆச்சரியமும் கோரிக்கையும்!

public

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்குமாறு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது எனக்கேட்டால் பலரும் ஹாக்கி என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதுதான் இல்லை. ஆரம்பகாலத்தில் உலகப்புகழ் பெற்ற விளையாட்டுகளான கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் ஹாக்கியில்தான் இந்தியா சிறந்து விளங்கியது.

அதிலும் ஐரோப்பிய நாடுகளை தவிர, ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்திய மற்ற கண்டத்தைச் சேர்ந்த ஒரே அணியாக இந்தியாவே திகழ்ந்தது. விளையாட்டுப் போட்டியைப் பொறுத்த வரையில்,தற்போது கிரிக்கெட் தொடங்கி பல விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும் முந்தைய கால கட்டத்தில் ஹாக்கியின் மூலமே உலகம் முழுவதும் அறியப்பட்டது இந்தியா. அதனாலேயே பலராலும் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என நம்பப்பட்டது.

இந்தநிலையில்தான் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்கக்கோரி பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். இது குறித்த அவரது கோரிக்கைக் கடிதத்தில், “ பல வருடங்களாக இந்திய விளையாட்டுத்துறைக்கு பெருமை சேர்த்துவருகிறது இந்திய ஹாக்கி அணி. எந்த ஒரு நாடுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவதைப் பெருமையாகக் கருதும். இந்தியாவுக்கு அந்தப்பெருமையை பெற்றுத்தந்தவர்கள் நமது ஹாக்கி வீரர்கள். இந்தியாவின் பல பகுதிகளில் ஹாக்கி விளையாடப்படுகிறது. குறிப்பாக தேசிய ஹாக்கி அணிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான வீரர்களை ஒடிசாவே அதிகமாக வழங்கியுள்ளது. அத்துடன் அடுத்த உலகக்கோப்பை ஹாக்கியும் ஒடிசா மாநிலத்தில்தான் நடக்கவிருக்கிறது.

இந்தநிலையில் ஹாக்கி இந்திய தேசிய விளையாட்டாக இன்னும் அறிவிக்கப்படவில்லை எனும் தகவலே எனக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. இந்த தகவலினால் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டேன். எனவே இந்தியாவுக்காக பெருமை சேர்த்த ஹாக்கியை பெருமைப்படுத்தும் விதமாக இதைத் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்று ஹாக்கி தேசிய விளையாட்டாக அறிவிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *