^ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுப்பு!

public

சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பித்தல் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை சமர்ப்பித்த மனுவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று(ஏப்ரல் 10) நிராகரித்தது.

அதிகமாக மாசு ஏற்படுத்தக்கூடிய 17ஆம் வகைப் பட்டியலில் வரக்கூடியது இந்த ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையை இயக்க ஆண்டுக்கு ஒருமுறை காற்று மற்றும் நீருக்கான அனுமதியை மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் நடப்பாண்டுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அனுமதியைப் புதுப்பிக்க கோரி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு 26 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய நிபந்தனைகளை அவர்கள் பின்பற்றாதது தெரியவந்தது. இதன் காரணமாக தற்போது ஆலையின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் சரி செய்த பிறகே மீண்டும் அனுமதி வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனுமதியைப் புதுப்பித்தல் தொடர்பான எங்களின் விண்ணப்பம் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலையின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாக மேலும் பல தகவல்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அதனைச் சரிபார்த்து மீண்டும் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முன்னதாக பராமரிப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடிவைக்கப்பட்டது. அனுமதி கிடைக்கும் வரை ஆலை மூடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *