<விஜய் 63 பற்றி யோகி பாபு

public

விஜய்யின் 63ஆவது படம் பற்றியும் தனது கதாபாத்திரம் பற்றியும் யோகி பாபு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யும், இயக்குநர் அட்லியும் மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்துள்ளனர். விஜய்யின் 63ஆவது படமான இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை இப்படத்தில் நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்காக பின்னி மில்ஸில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. படத்தொகுப்பாளராக ரூபனும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து யோகி பாபு சில தகவல்களை தெரிவித்துள்ளார். இப்படம் முழுவதுமே வருவது போன்ற கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு ரசிகர்களுக்கான விருந்தாக இப்படம் அமையும் என யோகி பாபு உத்தரவாதம் அளித்துள்ளார். ஏற்கெனவே தெறி படத்தில் விஜய்யுடன் நடிக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டதால் இப்படத்தில் வாய்ப்பு தருவதாக அட்லி உறுதியளித்ததாக யோகி பாபு தெரிவித்துள்ளார். மெர்சல், சர்கார் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய்யுடன் யோகி பாபு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *