@வாட்ஸ் அப் நியூ அப்டேட்!

public

பேஸ்புக்கில் இருந்துவரும் `picture-in-picture mode’ வசதியை அதன் மற்றொரு படைப்பான வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வாட்ஸ் அப் பீட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் மிகப் பிரபல செயலிகளான இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்டவற்றில் PiP எனப்படும் `picture-in-picture mode’ வசதி பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்த வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோக்களை நிறுத்தாமல் PiP மோடின் மூலம் அதனை மொபைல் ஸ்க்ரீனில் சுருக்கிவிட்டு; ஒரே சமயத்தில் மற்ற செயலிகளை உபயோகிக்க முடியும். இதனால் வீடியோ எந்தவிதத்திலும் தடைபடாது. இந்தச் சேவை தற்போது வாட்ஸ்அப்பின் 2.18.234 வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த (`picture-in-picture mode’ ) சேவையை அறிமுகம் செய்ய தொடர்ந்து பல மாதங்களாக வாட்ஸ் அப் நிறுவனம் போராடி வந்தது. தற்போது இதன் புதிய அப்டேட்டில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்தச் சேவை அறிமுகமானதும், இது ஆண்ட்ராய்டிலும் சாத்தியம் என்பதை உணர்ந்தோம்” இவ்வாறு தெரிவித்துள்ளது.

முன்னதாக வாட்ஸ் அப், அடுத்த ஆண்டு முதல் அதன் ஸ்டேட்டஸ் சேவையில் விளம்பரங்களை ஒளிபரப்பவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்ஸ்டகிராமின் ஸ்டோரீஸ் சேவையில் விளம்பரங்கள் ஒளிபரப்பாவது முன்பே அறிமுகமாகிவிட்டநிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் வரவிருக்கும் விளம்பர சேவையும் இதனைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *